உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



முல்லைத்தீவு, கொக்குதொடுவாய் பாடசாலைக்கு மும்பாக இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் ஒரு மாணவன் படுகாயமடைந்துள்ளார்.
பாடசாலைக்கு முன்பாக வீதியில் சைக்கிளில் சென்ற மாணவர்களை கொக்குளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒரு மாணவன் உயிரிழந்ததுடன் மற்றுமொரு மாணவன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

செல்வரத்தினம் கேதீஸ் (வயது-11) என்ற மாணவனே உயிரிழந்தார்.இந்த விபத்து காரணமாக ஆத்திரமடைந்த மக்கள் பாடசாலை முன்பாக குவிந்துள்ளனர். பொலிஸார் விபத்தை ஏற்படுத்தியவருக்கு சாதகமாக செயற்படுவதாக தெரிவித்து மக்கள் குழுமியுள்ளதால் கொக்குத்தொடுவாயில் தற்போது பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்