உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



சீனா நாட்டின் அன்குய் மாகாணத்தில் உள்ளது போசோவ் நகர். போசோவ் நகரின் குயாங் கவுண்டியில் உள்ள ஒரு டவுன்ஷிப் சுகாதார மையத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி தீயை கட்டுப்படுத்தினர். பின்னர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுவரை 5 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்