உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆதரவு வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்கும் முடிவை ஸ்ரீ.ல.சு.க.யின் பல தேர்தல் அமைப்பாளர்கள் எதிர்த்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இயங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களே எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் கோட்டாவுக்கும் தனது ஆதரவை வழங்கப்போவதில்லை என சந்திரிகா கூறியுள்ளதாகவும் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது எதிர்கால நிலைப்பாடு குறித்து எதுவும் தெரிவிக்காமல் இங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமையினால் அக்கட்சியின் அமைப்பாளர்கள் தீவிரமாக குழப்பமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்