உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்கி எங்கள் பெறுமதியான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அழிக்க இடமளிக்க வேண்டாமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்க எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதமொன்றை பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு சந்திரிகா அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“சுதந்திர கட்சியை சேர்ந்தவர்கள் கோட்டாவுக்கு ஆதரவு வழங்குவது ஏற்புடைய ஒன்றல்ல. இந்த செயற்பாடு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை முழுமையாக காட்டி கொடுப்பாகும்.குறித்த கட்சியின் தலைமைத்துவத்தை கைவிட தயாரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தால், நாம் தலைமைத்துவத்தை ஏற்று கட்சியை சிறந்த முறையில் கட்டியெழுப்பி இருப்போம்.

மேலும் ராஜபக்சர்களின் சூழ்ச்சிகளின் காரணமாகவே கட்சி தற்போது அழிவடைந்து காணப்படுகின்றது. எனவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அதிகமாக நேசிப்பவர், மற்றும் அறிந்தவர் என்ற ரீதியில் நான் உங்களை அழைக்கிறேன்.மேலும் பெறுமதியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிந்துபோகும் நிலைமைக்கு இனியும் இடமளிக்க வேண்டாம்” என கூறியுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்