உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இலங்கையில் வாழும் அனைத்து இந்து மக்களையும் பிரிநிதித்துவப்படுத்தும் வகையில் ‘இலங்கை தேசிய இந்து பேரவை’ என்ற பெயரில் சபையொன்றை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்து சமய, இந்து கலாசார, அரச மொழிகள், தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் மனோ கணேசன் முன்வைத்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு,அரசகரும மற்றும் சமூகமேம்பாட்டை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை வலுப்படுத்துதல், இந்து மத நம்பிக்கை, இந்து கலாசாரம் மற்றும் இந்து மரபுரிமையை மாவட்ட மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பாதுகாப்பதற்கும் வலுவுடன் இலங்கையை கட்டியெழுப்புவதற்காக சமூகத்தில் ஏனைய சமூகங்களுடன் சமத்துவத்துடன் செயல்படல் போன்ற இலக்கை எட்டும் எதிர்பார்ப்புடன் இத்திட்டம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழும் அனைத்து இந்து மக்களையும் பிரிநிதித்துவப்படுத்தும் வகையில் ‘இலங்கை தேசிய இந்து பேரவை என்ற பெயரில் சபையொன்றை ஸ்தாபிப்பதற்காக அமைச்சர் மனோ கணேசன் சமர்ப்பித்த பரிந்துரைக்கே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்