உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டபின்னர் எதிர்வரும் 27ம் திகதி முதல் வழமையான விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17ம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. காலை 10 மணிக்கு இடம்பெறும் இந்த நிகழ்வின் போது சென்னையிலிருந்து முதலாவது விமானம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வரவுள்ளது.

இதில் இந்திய சிவில் விமான சேவை அதிகாரிகளின் குழுவினர் வரவிருப்பதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.விமான நிலையம் திறக்கப்பட்டபின்னர் எதிர்வரும் 27ம் திகதி முதல் வழமையான விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், விமான நிலையத்தின் உத்தியோக பூர்வமாக திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு போக்குவரத்த மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அழைப்பு விடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்