உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய பணிகளுக்கு 93 சிங்கள இளைஞர்கள் யுவதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“எதிர்வரும் 17 ஆம் திகதி திறக்கப்படவுள்ள யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளுக்கு 93 சிங்கள இளைஞர்கள் யுவதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள சந்தர்ப்பத்தில் கூட தமிழ் மாகாணத்திலேயே எமது இளைஞர் யுவதிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்தோடு இந்த விவகாரம் தொடர்பாக தமிழ் மக்களை பிரதிநிதித்தவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதில் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கே அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும். வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான இளைஞர் யுவதிகள் இருக்கிறார்கள். அவர்களிடம் போதுமான தகுதிகள் இருக்கின்றன.

ஆனால் வடகிழக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்திகளிலும் தென்னிலங்கை இளைஞர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. திறக்கப்படவிருக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.

குறைந்தபட்சம் 93 சிங்கள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. வடக்கு கிழக்கில் ஆயிரக் கணக்கில் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கும் வாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்