உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இராணுவத்தினரின் வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதியின் கொக்காவில் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளை முந்தியவாறு சமிக்ஞையை ஒளிரவிடாது இராணுவ முகாமிற்குள் வாகனத்தை செலுத்த முற்பட்டபோதே, இந்த விபத்து இடம்பெற்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இராணுவத்தினரின் வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்