உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


மலேசியா மீது வல்லரசு நாடுகளால் பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் என்று அந்த நாட்டுப் பிரதமர் மஹாதீர் முகமது எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்காவுக்கும்-சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரால் சுய பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி சார்ந்த மலேசியப் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று கோலாலம்பூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கருத்தரங்கில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், மலேசியா மீது எந்த நாடு வர்த்தகத் தடைகளை விதிக்கும் என்று பிரதமர் குறிப்பிடவில்லை.
எனினும், பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகளால் தடையற்ற வர்த்தகம் பாதிக்கப்படுவது தமக்கு ஏமாற்றமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் துரதிஷ்டவசமாக மலேசியா சிக்கிக் கொண்டதாக பிரதமர் மகாதீர் முகமது குறிப்பிட்டார்.மலேசியா மிகப் பாரிய அளவில் ஏற்றுமதி செய்யும் சந்தைகளின் பட்டியலில் சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக சீனாவும், அமெரிக்காவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்