உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


காங்கோ நாட்டுத் தலைநகரில் அமெரிக்காவுக்க்குச் சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவுக்கு சொந்தமான ஒரு விமானம் இன்று காங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாசாவில் இறங்கியது. அப்போது, கடுமையான காற்று வீசியதால் நிலைதடுமாறிய விமானம் ஓடுபாதையை விட்டு தாறுமாறாக ஓடியது. 

இதில் அந்த விமானம் 2 ஆக பிளந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் 32 பயணிகள் இருந்தனர். அவர்களில் 20 பயணிகளும், விமானிகள் 2 பேரும், ஒரு பணியாளரும் ஆக மொத்தம் 23 பேர் பலியானார்கள். 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஜோசப் கிபோகோ தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்