உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சென்னை மாம்பலத்தில் உள்ள இயக்குனர் பாரதிராஜாவின் வீட்டில் விலையுயர்ந்த பொருட்களான ஐபோன், வெள்ளிப் பொருட்கள் ஆகியவை திருட்டு போயிருப்பதாக பொலிசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை அடுத்து பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் , இதற்கு முன்னர் நடிகர் பார்த்திபன் மாறும் இமான் அண்ணாச்சி ஆகியோர் வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

“இயக்குனர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா தமிழ் சினிமாவின் பல அற்புத படைப்புகளை கொடுத்து உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைத் திரையில் கண்முன் காட்டியுள்ளார். தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக கருதப்படும் அவரது இயக்கத்தில் பதினாறு வயதினிலே’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோர கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ இப்படி பல்வேறு சிறப்பு படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்