உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


வுனியாவில் பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாக மின்விநியோகத்தை வழங்க வேண்டும் எனக் கோரி, ஏ-9 வீதியையும், யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதையையும் முடக்கி நேற்றிரவு தொடக்கம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வவுனியாவில் – ஆச்சிபுரம் பகுதிக்கு நேற்று முந்தினம் மாலை சென்ற மின்சாரசபை ஊழியர்கள் மீது அங்கிருந்த ஒரு குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தாக்குதலில் ஆறு மின்சாரசபை ஊழியர்கள் படுகாயடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து, குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மின்சாரசபை ஊழியர்கள் நேற்று காலை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதன்காரணமாக வவுனியாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், அதிருப்தி அமைந்துள்ள மக்கள் நேற்றிரவு ஏ9 வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.இந்த நிலையில், ரயில் ஒன்றையும் முற்றுகையிட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்