உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


போதைப்பொருட்களுடன் சிறைச்சாலை அதிகாரியொருவர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.அகுணுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஒருவரே (32) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இவரிடமிருந்து சுமார் 10 கிராம் ஹெரோயின், சுமார் 14 கிராம் கஞ்சா, சுமார் 27 போதை மாத்திரைகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.குறித்த சிறைச்சாலைக்குள் நுழைந்த ஒருவர் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே, குறித்த சிறைச்சாலை கண்காணிப்பாளர் போதைப்பொருட்களை வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.இச்சந்தேகநபரை, அகுணுகொலபெலெஸ்ஸ நீதிமன்றத்தில் இன்று (07) முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்