உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


யாழ்ப்பாணத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் மீது கத்தியால் குத்தி தாக்குதல் மேற்கொண்டபின் அவரிடமிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சம்பவத்தில் படுகாயமடைந்த 50 வயதான செல்லத்துரை செல்வக்குமார், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று இரவு 11 மணியளவில் மருதனார் மடம்- உரும்பிராய் வீதியில் இந்த சம்பவம் நடந்தது.மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரை, இரண்டு மோட்டார்சைக்கிள்களில் வந்த நபர்கள் தம்மை சிஐடி என கூறி அவரது அடையாள அட்டையை கேட்டு, சோதனையிட்டுள்ளனர்.

அதன் பின்னர் மீண்டும் வந்த குறித்த நபர்கள் அவரை சற்றுத்தூரத்தில் வழிமறித்து, அவரை கத்தியால் குத்தி, அவரிடமிருந்த கையடக்க தொலைபேசி, மற்றும் 25,000 ரூபா பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் படுகாயமடைந்து வீதியில் விழுந்து கிடந்தவரை அந்த பகுதியால் வந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.மேலும் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்