உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


நாட்டில் அதிக பட்ச அதிகாரப் பகிர்வினை இன, மத, மொழி, கட்சி பேதங்கள் இன்றி அனைவருக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை என்னுடைய அரசாங்கத்தில் முன்னெடுப்பேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சஜித் பிரேமதாஸ மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக முன்வைக்க காத்திருக்கின்றோம்

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் என்னுடைய தலைமைத்துவத்தின் கீழ் இன, மத, கட்சி பேதமின்றி மீண்டும் அவர்களை மீள் குடியேற்றுவதற்கான திட்டங்களை நான் முன்னெடுக்கவுள்ளேன்.நெடுங்குளம், அவலங்குளம் போன்ற நீர்த்தேக்கங்களை அபிவிருத்தி செய்து விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் எனவும் உறுதியளிக்கின்றேன்.

தலைமன்னார், பேசாலை, சிலாவத்துரை போன்ற பகுதிகளிலுள்ள துறைமுகங்களை எனது தலைமையின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என்பதை கூறிக்கொள்ளுகின்றேன்.லைமன்னாரில் இருந்து திருகோணமலை வரையிலான நான்கு வழிப்பாதையை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம். அதேபோன்று புத்தளத்தில் இருந்து மன்னார் வரையிலான வீதியை இணைப்பதற்கான நடவடிக்கைகளை வில்பத்து காட்டிற்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லாமல் அதனை இணைப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

மீன்பிடியை அபிவிருத்தி செய்வதன் பொருட்டு மீன் பிடி கைத்தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் பெற்றுத்தர அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.குறிப்பாக இந்த மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேசச் செயலகங்கள் இருக்கின்றது.

குறித்த பிரதேசச் செயலகங்களுக்கு கைத்தொழில் பேட்டைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்.மன்னார் மாவட்டத்தில் மாத்திரமல்ல நாடளாவிய ரீதியில் இருக்கின்ற அனைத்து பிரதேசச் செயலகங்களிலும் இந்த கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்படும். அதனூடாக இளைஞர் யுவதிகளின் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்துவதே எங்களுடைய நோக்கம்.

ஏழை மக்களுக்கு தற்போது சமூர்த்தி என்கின்ற வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் வாயிலாக இலங்கையில் இருந்து நாங்கள் ஏழ்மையை நீக்க வேண்டும்.
இதேவேளை தற்போது கடமையாற்றுகின்ற முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசாங்க சம்பளத்தை பெற்றுத்தர என்னுடைய அரசாங்கத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன் என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

மேலும் பாலர் பாடசாலைகளுக்கு தனித்தனியான கட்டடங்கள், பிள்ளைகள் விளையாடுவதற்கு சிறுவர் பூங்கா, பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவு ஆகியவற்றையும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுப்பேன். உப ஆசிரியர்களுக்கும் அரசாங்க சம்பளம் வழங்கப்படும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
பாலர் பாடசாலை கல்வியையும் இலவச கல்விக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை என்னுடைய அரசாங்கத்திலே முன்னெடுப்பேன்.

அந்தவகையில் ஒருமித்த இந்த இலங்கை நாட்டில் அதிக பட்ச அதிகாரப்பகிர்வினை அனைவருக்கும் இன, மத, மொழி, கட்சி பேதங்கள் இன்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் என்னுடைய அரசாங்கத்தில் முன்னெடுப்பேன்.
இனத்தை வைத்தோ, மதத்தை வைத்தோ மதங்களை, இனங்களை ஒரு போதும் அழிக்க முடியாது. எனவே அதனை அடிப்படையாக வைத்தே ஜாதி, மத பேதங்களை கடந்து மன்னார் மாவட்டத்தை அபிவிருத்தியின் உச்ச கட்டத்திற்கு என்னுடைய அரசாங்கத்திலே நான் கொண்டு செல்வேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்