உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஈரானில் உணரப்பட்ட சக்கிவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர்.
ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
5.9 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது மையம் கொண்டிருந்தது. நிலநடுத்தை தொடர்ந்து சில கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்தநிலையில் குறித்த நிலநடுக்கம் காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 120 பேர் காயமடைந்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்