உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவின் அப்லேண்ட் நகரதில் உள்ள  கேபிள் விமான நிலையத்திலிருந்து இன்று காலை சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. சிறிது நேரத்தில் திடீரென விமானம் அப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் மீது மோதியது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். ஆனால் அந்த வீட்டில் இருந்த தந்தையும் மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், ‘விமானம் மிக அருகில் பறப்பது போன்று சத்தம் கேட்டது. இதையடுத்து பார்க்கையில் விமானம் மிகவும் தாழ்வாக பறந்து வந்து கொண்டிருந்தது. மேலும் யு-டர்ன் எடுத்து பறந்த போது வீட்டின் மீது மோதி கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் வீட்டின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்தது’, என தெரிவித்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.விபத்துக்குள்ளான விமானம், இருவர் அல்லது மூவர் பயணிக்ககூடிய ஒற்றை எஞ்சின் உடைய சிர்ரஸ் எஸ்.ஆர்- 22 வகையைச் சேர்ந்தது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்