உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


வவுனியா, குருமன்காடு பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குருமன்காடு பகுதியிலிருந்து மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறியொன்று வைரவப்புளியங்குளம் வீதிக்கு மாற முற்பட்ட சமயத்தில் வவுனியா நகரிலிருந்து, மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள், லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளின் சாரதியான 42 வயது மதிக்கத்தக்க நபரொருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன், இரு வாகனங்களையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்