உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மட்டக்களப்பில் காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டம், மட்டக்களப்பு-திருமலை வீதியில் பேரணியாக ஆரம்பமானது.அங்கிருந்து ஆரம்பித்து மட்டு. நகர் மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று அங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு குறித்த பேரணி சென்றதுடன் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

‘யார் வெற்றி பெற்றாலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம்’, ‘உண்மை, நீதி, இழப்பீடு’, ‘6 ஆயிரம் ரூபாய் இடைக்கால கொடுப்பனவு மீள இடம்பெறாமை’ போன்ற சுலோகங்கள் மற்றும் காணமல்போனவர்களின் ஒளிப்படங்களுடன் உறவுகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்