உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


பிரித்தானிய அரசியலில் ரஷ்யாவின் தலையீடு குறித்து பிரித்தானிய அரசு இதுவரை ஒரு அறிக்கையைக் கூட வெளியிடாதமை வெட்கக்கேடானது என்று ஹிலரி கிளிண்டன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.இந்த அறிக்கைக்கு முறையான பாதுகாப்பு அனுமதி உள்ளது. ஆனால் டிசெம்பர் 12 ஆம் திகதி தேர்தலுக்குப் பின்னரும் அது வெளியிடப்படாது.
மேலும் இந்த நாட்டில் வாக்களிக்கும் ஒவ்வொரும் பொதுத் தேர்தல் நடப்பதற்கு முன்பு அந்த அறிக்கையைப் பார்க்க தகுதியானவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹிலாரி கிளிண்டன் பிபிசியுடனான நேர்காணலின் போது இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களை துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாக்க கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வேட்பாளர்கள் அச்சுறுத்தல் காரணமாக போட்டியிலிருந்து தள்ளி வைக்கப்படுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாம் அதை அனுமதிக்க முடியாது. அத்துடன் உங்களது அரசாங்கமும் அதை அனுமதிக்கக்கூடாது.
தேர்தலில் இருந்து விலகுவும் வேட்பாளர்களைப் பாதுகாப்போம். இந்த ஜனநாயக விரோத சக்திகள், மக்களை குறிப்பாக பெண்களை அச்சுறுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அரசாங்கத்தில் இருப்பவர்கள் மிகத் தெளிவாகக் கூறவேண்டும் என்று ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை பிரித்தானிய ஜனநாயகத்தில் ரஷ்யாவின் தலையீடு குறித்து பாராளுமன்றத்தின் புலனாய்வு மற்றும் பாதுகாப்புக் குழு ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்