உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


 

பாதுகாப்பு அற்ற புகையிரத கடவையில் புகையிரத்துடன் மோதுண்ட ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள புகையிரத கடவையில் யாழ்தேவி புகையிரத்ததுடன் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.இவ் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர், பாதுகாப்பு அற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்டவேளை தூக்கி புகையிரத்துடன் மோதுண்டதை அடுத்து யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பாக மேலதிக விசாரணையினை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்