உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


வவுனியாவில் ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
வவுனியா, பிடியாணை பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.திஸ்சலால்த சில்வாவின் உத்தரவுக்கமைவாக வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி என்.வெலிகல தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

இதன்போது தேக்கவத்தைப் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு கிராம் 970 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் வவுனியா பிடியாணை பொலிஸ் பிரிவினர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்