உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த முச்சக்கர வண்டி விளக்குவைத்த குளம் பகுதியில் இன்று அதிகாலை 12.15 மணியளவில் விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டிக்கு முன்னால் சென்ற வாகனம் மாட்டுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் அவசர அம்புலன்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் 40 வயது மதிக்கதக்க ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்