உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அமெரிக்காவின் தெற்கு டக்கோட்டா மாநிலத்தில் தனியார் விமானம்  விபத்துக்குள்ளானதில் இரு குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் தெற்கு டக்கோட்டா மாநிலத்தில் தனியாருக்கு சொந்தமான ‘பிலாட்டஸ் பி.சி.12’ ரகத்தை சேர்ந்த சிறிய விமானம் ஒன்று சேம்பர்லெய்ன் விமான நிலையத்தில் இருந்து 12 பேருடன் பயணித்தது.

ஓடுதளத்தில் இருந்து விண்ணை நோக்கி உயர்ந்த விமானம் சுமார் ஒரு மைல் தூரத்தில் நிலைகுலைந்து கீழே விழுந்து நொறுங்கியது.இந்த விபத்தில் விமானி, இரு குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பகுதியில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்