உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து நேற்று (01) யாழ்ப்பாணம் நகர, பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 04.210 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கத்துடன் கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் நேற்று யாழ்ப்பாணம் நகரில் ஒரு கூட்டு நடவடிக்கையை தொடங்கின.

அங்கு மேற்கொண்டுள்ள சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, யாழ்ப்பாணத்தில் 3 வது தெருவைக் கடந்து சென்ற சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்று கண்கானிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபரிடமிருந்து இந்த கேரள கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த சந்தேக நபர் 34 வயதான மட்டக்களப்பு, ஆரியம்பதி பகுதியில் வசிக்கின்ற போதைப்பொருள் கடத்தல்காரர் என கண்டரியப்பட்டது.

கைது செய்துள்ள சநகேநபர், மோட்டார் சைக்கிள் மற்றும் கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்