உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


ஸ்கொட்லாந்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரையொன்றில் இறந்த நிலையில் கரையொதுங்கிய திமிங்கிலத்தின் வயிற்றை பார்வையிட்டஅதிகாரிகள் அதிர்ச்சியடைந்த சம்பவமொனறு இடம்பெற்றுள்ளது.
இந்த திமிங்கிலம் உயிரிழந்து 48 மணி நேரத்தின் பின்னர் லஸ்கென்டைர் என்ற கடற்கரை பகுதியில் நேற்றுமுன்தினம் கரையொதுங்கியுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு கரையொதுங்கிய திமிங்கிலத்தின் வயிற்றிலிருந்து 220 பவுண்ட் குப்பைகள், பிளாஸ்டிக் கோப்பைகள், கையுறைகள், பிளாஸ்டிக் நாடாக்கள், குழாய்கள், கயிறு, வலைகள், மூட்டைகள் உள்ளிட்ட பெருந்திரளான பிளாஸ்டிக் பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக ஸ்காட்டிஷ் மரைன் வனவிலங்கு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்