உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


யாழ்,கல்வியங்காடு பகுதியில் இளைஞர் ஒருவர் தலையில் வாள் வெட்டுக்காயங்களுடன் குற்றுயிராக கிடந்தநிலையில் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அஜித் (வயது 26) என்ற இளைஞரே வெட்டுக் காயங்களுடன் கல்வியங்காடு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் பின்புறமாக உள்ள வாய்க்கால் பகுதியில் இன்று (04) வீசப்பட்டுள்ளார்.

வெட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவர் கிடப்பதைக் கண்ட பொது மக்கள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அந்த தகவலின் பிரகாரம், கோப்பாய் பொலிஸார் குற்றுயிராக கிடந்த அந்த நபரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இன்று காலை 11.00 மணியளவில் முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் அவரைவீசியதாகவும், அப்பகுதியில் கண்டவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

மக்களின் தகவலின் பிரகாரம் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், கஞ்சா வியாபாரத்தினால் ஏற்பட்ட முறுகல் நிலையினால், மற்றைய குழுவினர் இவரை வெட்டியதாகவும், பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்