உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


இந்தியாவில் செய்யாறு அருகே இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கை அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
செய்யாறு வட்டம், பாப்பாதாங்கல் கிராமம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 46 வயதுடைய கணேசமூர்த்தி என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவா் அரசு கலைக் கல்லூரி அருகே மரத்தச்சு வேலை செய்து வருகிறார். இவருக்கு கைக்குழந்தை ஒன்றும் உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மதியம் சாப்பாட்டிற்காக செய்யாறு -ஆற்காடு வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.கணேசபுரம் அருகே சென்றபோது வாகனம் ஒன்று மோதிவிட்டுச் சென்றதாக தெரிகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.

தகவல் அறிந்த செய்யாறு பொலிஸார் கணேசமூர்த்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.மேலும் இதுகுறித்து விசாரணைகளை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்