தமிழில் எழுத
பிரிவுகள்


திருமலை, நிலாவெளி – ஆத்திமேடு பிரதேசத்தில் 6ம் கட்டை பகுதியில் நேற்று 18000 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் உட்பட மூவரை கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீண்டகாலமாக கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர் என்றும் குறித்த பெண்ணும் ஒர் ஆணும் இரண்டாவது முறையாக கஞ்சா விற்பனை செய்யும் போது பிடிபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

திருகோணமலை லவ்லேன், தக்வா நகரைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரிடமிருந்து 6000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவும், ஜாமாலியா பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரிடமிருந்து 5000 மில்லி கிராம் கேரளா கஞ்சாவும், ஆத்திமேடு பிரதேசம் 6ம் கட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயிடமிருந்து 7000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவையும் நிலாவெளி பொலிஸார் வசம் ஒப்படைத்தாக அவர்கள் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களையும் கேரளா கஞ்சாவையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்