தமிழில் எழுத
பிரிவுகள்


ஐக்கிய இராஜியத்தின் கொன்சவேட்டிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்கு எதிராக பிரித்தானியாவில் வாழும் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

லண்டனில் அமைந்துள்ள தொழிற்கட்சியின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக நேற்று இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் இரண்டு இராஜியங்கள் உருவாக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொன்சவேடிவ் கட்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி குறித்த தீர்மானத்தை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் மணிசா குணசேகர நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கொன்சவேடிவ் கட்சி உறுப்பினர்கள் விடுதலை புலிகள் அமைப்புக்கு சார்பானவர்கள் என தெரிவித்து பிரதானியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் அமைப்பு இந்த போராட்டத்தை நடத்தியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்