உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அமெரிக்காவின் பேர்ல் துறைமுக கடற்படை கப்பல் தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அமெரிக்காவின் ஹவாய் தீவில் பேர்ல் துறைமுக கப்பல் கட்டும் தளத்தின் தெற்கு நுழைவுவாயில் ஊடாக நேற்று (புதன்கிழமை) மாலை மர்ம நபர் நுழைந்துள்ளார். அவர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவத்திற்கு பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தனது தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் கடற்படை சீருடை அணிந்து இருந்திருந்த நிலையில் கடற்படையின் மாலுமி என அதிகாரிகள் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டைச் தொடர்ந்து கப்பல் கட்டும் தளம் தற்காலிமாக மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்