தமிழில் எழுத
பிரிவுகள்


வாழைச்சேனை- நாசிவந்தீவு கிராமத்தில் கல்வி பயிலும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை கல்குடா கடற்படையினர் இயந்திரப் படகு மூலம் ஏற்றி செல்கின்றனர்.
நாசிவந்தீவு கிராமத்தில் இருந்து வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் பரீட்சை எழுதும் மாணவர்கள் பதின்மூன்று பேரை கல்குடா கடற்படையினர் இயந்திரப் படகு மூலம் கொண்டு செல்கின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் மாணவர்கள் இயந்திரப்படகு ஊடாகவே தங்களின் பயணத்தை மேற்கொண்டு தங்களது கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை எழுதி வருகின்றனர்.

நாசிவந்தீவு கிராமத்தில் 391 குடும்பங்களில் 1120 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தங்களது உறவினர்கள் வீடுகளிலும், தங்களது வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த கிராம மக்களின் போக்குவரத்து பிரதான பாதையான கட்டுமுறிவு பாதை நீரினால் முற்றுமுழுதாக மூழ்கியுள்ளதால் மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு காணப்படுகின்றது.

இதன் காரணமாக மக்கள் வாழைச்சேனை ஆற்றினால் இயந்திரபடகு மூலம் பயணம் செய்து வருகின்றனர். வாழைச்சேனை நாசிவந்தீவு கிராம மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கும், நோய் பாதிப்பு எற்பாட்டால், தொழில்கள் உட்பட்ட பல தேவைகளுக்கு வாழைச்சேனை பிரதேசத்திற்கு வரவேண்டியுள்ளதால் மக்கள் மிகவும் அசத்திற்கு மத்தியில் இயந்திரபடகு மூலம் பயணம் மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக வாழைச்சேனை ஆற்றில் ஆழம் அதிகரித்து காணப்படுவதால் நாசிவந்தீவு மக்களின் போக்குவரத்துக்காக இயந்திரப்படகு சேவையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்