உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரித்தானிய தம்பதியிடமிருந்து பல இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எல்ல பிரதேசத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பிரித்தானிய தம்பதியினரிடமே இவ்வாறு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.குறித்த தம்பதியினர் பயணித்த வாகனத்தின் சாரதியே பணத்தினை கொள்ளையடித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

10 இலட்சம் ரூபாய் பணமும், பெறுமதியான பொருட்களுமே இதன்போது கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பாக வீரவில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்