தமிழில் எழுத
பிரிவுகள்


யாழ்ப்பாணம், வண்ணான் குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (08) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.சடலமாக மீட்கப்பட்டவர் கொழும்பு பகுதியை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் என தெரிவிக்கப்படுகிறது.காட்டுப்பூச்சி என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்ட இவர் குடும்பத்தவர்கள் கைவிட்ட நிலையில் யாழ்ப்பாணத்திற்கு வந்து இங்கு தெரிந்தவர் ஒருவரின் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

குளத்தில் சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் பிரதேச மக்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு இன்று காலை தகவல் வழங்கியதை தொடர்ந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்