தமிழில் எழுத
பிரிவுகள்


இந்தியாவின் டெல்லி தலைநகர் அனாஜ் தானிய மண்டியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 35 பேர் பலியாகியுள்ளனர்.தலைநகர் டெல்லியில் உள்ள ஜான்சி ராணி சாலையில் அமைந்துள்ள தனாஜ் மண்டியில் இன்று அதிகாலை பயங்கர தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்துள்ளது.தகவலறிந்து 30க்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்தில் சிக்கி 35 பேர் பலியாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 50க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு மருத்துவ குழுவினர் சென்று படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்