தமிழில் எழுத
பிரிவுகள்


இலங்கையில் நீண்ட காலமாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு சர்வதேசத்தின் ஊடாக ஒருபோதும் தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்தார்.
முல்லைத்தீவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தேசிய நல்லிணக்கமே பிரச்சினைகளைத் தீர்க்க ஒரே வழிமுறையாகும் என சுட்டிக்காட்டினார்.

அதாவது, சர்வதேசம் தமது பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வினைப் பெற்றுத் தரும் என்பதை தான் நம்பவில்லையென்றும் இதனால், தேசிய நல்லிணக்கமே இனப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத் தரும் என்பதை தான் நம்புவதாகவும் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்