உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


வவுனியா வடக்கு பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று நேரில் பார்வையிட்டு மக்களுடைய குறைகளை கேட்க சென்ற கிராமசேவகர் வெள்ளத் தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் மீனவர்களால் மீட்கப்பட்டு வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக் குட்பட்ட ஊஞ்சல்கட்டி மற்றும் வெடிவைத்தகல் ஆகிய கிராமங்களின் கிராமசேவகராகப் பணியாற்றும் செல்வராஜா சுபாஸ் என்னும் கிராமசேவகரின் இரு பிரிவுகளும் மழையால் பாதித்த நிலையில் ஊஞ்சல் கட்டி பிரதேச மக்களை பார்வையிட்ட பின்னர் வெடிவைத்தகல் கிராமஅலுவலர் பிரிவில் உள்ள கலாபோகஸ்வெவ பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது கஜபாபுர பகுதியில் பாய்ந்து சென்ற ஆற்றில் அடித்துச் செல்லப் பட்டார்.

இவ்வாறு கிராம சேவகர் அடித்துச் செல்லப்பட்ட சமயம் அந்த ஆற்று நீரில் மீன்பிடித் துக் கொண்டிருந்தவர்கள் அவதானித்துள்ள னர். இதனால் உடனடியாக மூவர் ஆற்றில் குதித்து நீண்ட போராட்டத்தின் மத்தியில் கிராமசேவகரை மீட்டனர்.

இதன்போது கிராம சேவகர் காயமடைந் ததுடன், அவரது உடைமையில் இருந்த கைத் தொலைபேசி மற்றும் பேர்ஸ் உட்பட்ட அனைத்து உடமைகளும் அடித்துச் செல்லப் பட்ட நிலைமையிலேயே மீட்கப்பட்டார். மீட் கப்பட்ட கிராமசேவகர் சிகிச்சைக்காக வவு னியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளார்.

இதேநேரம் மோட்டார் சைக்கிள் நீண்ட நேரத்தின் பின்னர் மீட்கப்பட்டமையினால் அது பயன்படுத்த முடியாத நிலையில் உள் ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்