தமிழில் எழுத
பிரிவுகள்


கிளிநொச்சி விவேகானந்தநகரைச் சேர்ந்த பெண் ஒருவர் போலிஆவணங்களை காட்டி பணம்சேகரிப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த பெண் தனக்கு தொண்டைப் புற்றுநோய் இருப்பதாக கூறி போலி ஆவணங்களை காண்பித்து பணம் சேகரிக்கும் நடிவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் தான், யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பளை வைத்தியசாலைகளில் சிகிசை பெறுவதாகவும், இதற்கு சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு இரண்டு மில்லியன் ரூபா பணம் தேவை என குறித்த பெண் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் செய்திகளை வெளியிட்டு பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் கடந்த சில மாதங்களாக ஈடுப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்