உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


டெல்லியில் தொழிற்சாலைகள் பல இயங்கி வரும் 4 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டெல்லியில் ராணி ஜான்சி வீதியிலுள்ள அனஜ் மண்ட் என்ற 4 மாடி கட்டிடமே இவ்வாறு தீயில் சாம்பலாகியுள்ளது.நேற்று அதிகாலை 5 மணியளவில் இரண்டாவது மாடியில் இருந்த ஒரு தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

இந்த தீ வேகமாக பரவியுள்ளது. அப்போது, தொழிலாளர்கள் பலர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர்.தீயுடன் எழுந்த கரும்புகையால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. சிலர் தீயில் சிக்கியுள்ளதாகவும், சிலர் மயங்கி விழுந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

30 தீயணைப்பு வாகனங்களில் 150 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

தீயில் சிக்கியிருந்த 63 பேரை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.சம்பவ இடத்திலேயே 9 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். தூக்கத்திலேயே அவர்கள் பரிதாபமாக உயிர் இழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 43 ஆக பதிவாகியுள்ளது. பலியானவர்களில் 15 பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.இச்சம்பவம் தொடர்பில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் தமது இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. (மு)

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்