உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பாறையில் மோதி கடலில் மூழ்கி கொண்டிருக்கும் கப்பலில் இருந்து டீசலை வெளியேற்ற நவீன கப்பல்கள் வருகின்றன.
விசாகப்பட்டினத்தில் இருந்து இரும்பு தாதுக்களை ஏற்றிக்கொண்டு பாகிஸ்தான் நோக்கி புறப்பட்ட பனாமா நாட்டு கப்பல் ஒன்று குளச்சல் அருகே மணவாளக்குறிச்சி கடல் பகுதியில் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், கப்பலுக்குள் தண்ணீர் புகுந்ததால் கப்பல் மூழ்க துவங்கியது. கப்பலை ஆய்வு செய்ததில் நடுப்பகுதி சேதமடைந்துள்ளதால் எந்நேரத்திலும் மூழ்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கப்பல் மெதுவாக மூழ்க துவங்கி மூன்று நாட்கள் ஆன நிலையில் அதில் இருந்து டீசல் சிறிது சிறிதாக வெளியேறி வருகிறது.

இதைத் தொடர்ந்து துறைமுக போலீசார், கடலோர காவல் படையினர் இப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளியேறும் டீசல் உடனடியாக அகற்றப்படாவிடில் மீன்கள் மற்றும் கடலோர சுற்றுப்புறங்களில் கடுமையான மாசு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கலெக்டர் ராஜேந்திர ரத்னு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கடல்சார் வாரிய கேப்டன் சாய்நாத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி கப்பலில் உள்ள டீசலை உடனடியாக வெளியேற்ற கொச்சியில் இருந்து ஆயில் கன்டெய்ன் புளூம் என்ற கப்பல் வரவழைக்கப்படுகிறது.

மேலும் ஹாலந்து நாட்டில் இருந்து அதிநவீன மீட்பு கப்பலும் வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்