உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா மற்றும் சீனன் குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசங்களில் நேற்று ஹெரோயினுடன் இருவரை கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கிண்ணியா அல் அக்ஸா சந்தியில் வைத்து 47 வயதுடைய ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 80 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் குறித்த சந்தேக நபர் பைசல் நகர், புதநகர் கிண்ணியா-3 வை வதிவிடமாக கொண்டவர் என தெரிய வந்ததும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையின் அடிப்படையில் கிண்ணியா-2 ரஹ்மாமானியா பிரதேசத்தில் 52 வயதுடைய ஒருவரிடமிருந்து 680 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் குறித்த சந்தேக நபர் வேப்பங்குடா சீனன் குடா பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் நோக்கில் முறையே கிண்ணியா மற்றும் சீனன் குடா பொலிஸார் வசம் ஒப்படைக்கப் பட்டதாக விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்