Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கண்ணை மறைக்கும் பயங்கர புழுதிக் காற்று காரணமாக வடகிழக்கு ஜேர்மனியில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர்.
வடகிழக்கு ஜேர்மனியின் கடலோர நகரமான ரோஸ்டாக் பகுதியில் ஏற்பட்ட திடீர் புழுதிக் காற்று வாகன ஓட்டிகளின் கண்ணை மறைத்தது. அதனால் வடக்கு ஜேர்மனியின் நெடுஞ்சாலையில் பெரும் விபத்து ஏற்பட்டது.

டிரக்குகளும் கார்களும் எதிர் திசையில் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 17 கார்கள் மற்றும் 3 டிரக்குகள் தீ பிடித்து எரிந்தன. விபத்தில் 40-50 வாகனங்கள் சிக்கின என்று பொலிசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் அயாயகரமான பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனமும் சிக்கிக் கொண்டது.

பல வாகனங்களின் தொடர் விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 27 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். பல டிரைவர்கள் தங்களது காருக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

இந்த விபத்து குறித்து பொலிஸ் பெண் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,”மெக்லன் பார்க் பகுதியில் ஏற்பட்ட பயங்கர விபத்து இதுவாகும்” என்றார்.

நிகழ்விடத்திற்கு தீயணைப்புத் துறையினர், அவசர மீட்புக் குழுவினர் மற்றும் பொலிசார் விரைந்தனர். சூறைக்காற்றால் ஏற்பட்ட மோசமான வெளிச்சத்தால் ஹெலிகாப்டர்கள் நிகழ்விடத்தில் தரை இறங்க முடியவில்லை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்