உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


கற்பிட்டி குடாவ கடற்கரையில் நேற்று (10) 10 கிலோ கிராம் நிறையுடைய தங்கத்துடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கற்பிட்டி குடாவ, புதுக்குடியிருப்பு மற்றும் குறிஞ்சிப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இயந்திரப் படகொன்றின் மூலம் கடல் மார்க்கமாக இந்தியா செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டதுடன் சந்தேக நபர்களிடமிருந்து 10 கிலோ கிராம் தங்கமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்த தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்ட கற்பிட்டி பொலிஸார் இதுதொடர்பில் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்