தமிழில் எழுத
பிரிவுகள்


கோண்டாவில் பிரதேசத்தில் ரயிலுடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி நேற்று (10) பயணித்த தபால் ரயிலுடன் கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அருகில் குறித்த நபர் விபத்துக்கு உள்ளாகியிருந்தார்.

அதனையடுத்து, யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், அவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்