தமிழில் எழுத
பிரிவுகள்


இந்திய இயக்குநர் மு.களஞ்சியம், இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சட்டை இராணுவம் மறுத்துள்ளது.
இலங்கை இராணுவத்தால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், இயக்குநர் மு.களஞ்சியம் நாடு திரும்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து, இராணுவத்தின் ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் சுமித் அத்தபத்துவிடம் தமிழ்மிரர் கேட்டபோது, இந்த குற்றச்சாட்டை மறுத்தார்.

அந்த செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது என்றும் அவர் கூறினார்.
கடந்த 27ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த மாவீரர் தின நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக இயக்குநர் மு.களஞ்சியம் இலங்கைக்கு வந்துவிட்டு நாடு திரும்பும் வழியில் இந்த தாக்குதலுக்கு உள்ளானதாக இந்திய செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்