தமிழில் எழுத
பிரிவுகள்


சுவிட்சார்லாந்து தூதரகத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணிற்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் வெளிநாடு செல்வதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.இந்த மனு இன்று (12) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடத்தப்பட்டதாக கூறப்படும் அதிகாரியிடம் இதுவரை 3 முறை வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் குறித்த பெண் அதிகாரி கடந்த 08 ஆம் திகதி மாலை முதல் தடவையாக வாக்குமூலம் வழங்க ஆஜராகியிருந்தார்.

அவருடன் சுவிஸ் தூதரக உத்தியோகத்தர் மற்றும் 2 சட்டத்தரணிகளும் சென்றிருந்தனர்.இதற்கமைய குறித்த சுவிஸ் தூதரக அதிகாரியிடம் சுமார் 5 மணித்தியாலங்கள் வரை வாக்குமூலம் பெறப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாக்குமூலம் பெற்றுக்கொண்ட பின்னர் அவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நீதிமன்ற வைத்தியரிடம் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி கடந்த 25 ஆம் திகதி தனது அலுவலக பணிகளை நிறைவு செய்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

இதேவேளை, சுவிட்சர்லாந்து குறித்த பெண்ணிற்கு ​வௌிநாடு செல்ல டிசம்பர் 12 ஆம் திகதி வரை தடை நீடிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் டிசம்பர் 17 ஆம் திகதி வரையில் வெளிநாடு செல்வதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்