தமிழில் எழுத
பிரிவுகள்


சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.விழுந்தவர் அச்சுவேலி பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய எம். திலீபன் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த வேனும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த மேற்படி நபர் வேன் உடன் மோதி விபத்துக்குள்ளானதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்துடன் தொடர்புடைய வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்