தமிழில் எழுத
பிரிவுகள்


‘நான் அவளை சந்தித்த போது’. இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மலையாள முன்னணி நடிகர் இன்னசன்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ஜி.எம்.குமார், பருத்திவீரன் சுஜாதா, கோவிந்த மூர்த்தி, சாம்ஸ், டி.பி.கஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ், ராதா, சுப்புராஜ், காதல் சரவணன், நாடோடிகள் ரங்கா ஆகியோர் நடித்துள்ளனர்.

‘மாசாணி மற்றும் பரத் நடித்த ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ போன்ற படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர் இந்தப் படத்தை இயக்குகிறார்.

ஒளிப்பதிவு – ஆர்.எஸ்.செல்வா, இசை – ஹித்தேஷ் முருகவேல், பாடல்கள் – அறிவுமதி, நா.முத்துக்குமார், எல்.ஜி.ரவிச்சந்தர், நல்.செ.ஆனந்த், கலை – ஜெய்காந்த் / எடிட்டிங் – ராஜாமுகம்மது, நடனம் – சிவசங்கர், பாலகுமாரன் – ரேவதி, தினேஷ், ஸ்டன்ட் – ஹரி தினேஷ் / தயாரிப்பு மேற்பார்வை – ஜி.சம்பத், தயாரிப்பு – V.T.ரித்திஷ்குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எல்.ஜி.ரவிசந்தர்.படம் இம்மாதம் 27 ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்