தமிழில் எழுத
பிரிவுகள்


பாணந்துறையில் வட மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளார். மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது இரண்டு தரப்பிற்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ரெஜினோல்ட் குரே மீது கொடூரமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னாள் ஆளுநர் சென்று கொண்டிருந்த வீதியை மறித்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அங்கு சென்ற ரெஜினோல்ட் குரேவை பொது மக்கள் சுற்றி வளைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.எனினும் பொலிஸார் தலையிட்டு இரண்டு பிரிவுகளையும் கலைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்