உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது நேட்டோ படைகள் தவறுதலாக குண்டு வீசியதில் 4 கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்தனர்.

லிபியாவில் அதிபர் கடாபியை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்கள் மீது அந்த நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக லிபிய ராணுவத்தை ஒடுக்கும் வகையில் அங்கு நேட்டோ படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நேட்டோ படைகள் லிபிய ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் எண்ணெய் நகரான பிரெகாவில் தவறுதலாக கிளர்ச்சியாளர்கள் மீது நேட்டோ படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில் 4 கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலால் கிளர்ச்சியாளர்கள் நேட்டோ படைகள் மீது கடும் கோபம் அடைந்துள்ளனர்.

கிளர்ச்சியாளர்கள் மீது நேட்டோ படைகள் தாக்குதல் நடத்துவது கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது முறையாகும். இந்த தாக்குதல் தவறுதலாக நடந்துவிட்டது என்றும் இதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் நேட்டோ படைகளின் தலைவர் ஆண்டர்ஸ் போக் ரஸ்மஸ்ஸன் தெரிவித்தார்.

இதனிடையே கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள மிஸ்ராடா நகரை நோக்கி கடாபியின் லிபிய ராணுவம் வேகமாக முன்னேறி வருவதாக பி.பி.சி அறிவித்தது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்